search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யாத்திரை தொடக்கம்"

    வைஷ்ணவ தேவி குகைக்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட யாத்திரை மீண்டும் தொடங்கியது. #VaishnoDeviYatra #JKforestfire #yatraresumes

    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், ரெசாய் மாவட்டத்தின் கத்ரா என்ற ஊரின் அருகாமையில் அமைந்துள்ள வைஷ்ணவ தேவி குகைக்கோவில் மிகவும் புனிதமான இந்து சமயக்கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவில் சக்தி வழிபாட்டிற்கு மிகவும் பெயர் பெற்ற புனிதத்தலமாக விளங்கி வருகின்றது.

    வடஇந்தியாவில் மிகவும் போற்றப்படும் வழிபாட்டுத்தலங்களில் இதுவும் ஒன்று. கடல்மட்டத்தில் இருந்து சுமார் 5200 அடிகள் உயரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் சுமார் 8 லட்சம் பக்தர்கள் வைஷ்ணவி தேவி கோவிலுக்கு அன்னையின் அருள் வேண்டி வருகின்றனர். 

    இதனிடையே, யாத்திரை செல்லும் திரிகுடா மலைப்பகுதியில் இன்று காட்டுத்தீ ஏற்பட்டது. இதையடுத்து யாத்திரை செல்வதற்கான முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் 20,000க்கும் அதிகமான பக்தர்கள் யாத்திரைக்கு முன்பதிவு செய்ய முடியாமல் கத்ராவில் இருந்தனர். மேலும் ஏற்கனவே யாத்திரைக்கு சென்ற சுமார் 3000 பேர் வைஷ்ணவி தேவி கோவிலில் சிக்கியிருப்பதாக கூறப்பட்டது.



    காட்டுத்தீயை அணைக்கும் பணிகளும், கோவிலில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மீட்புப்பணிகளுக்காக புதிதாக அமைக்கப்பட்ட பேட்டரி கார் பாதை பயன்படுத்தப்பட்டது. இரு ராணுவ ஹெலிகாப்டர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. 

    இந்நிலையில், காட்டுத்தீ தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து யாத்திரை மீண்டும் தொடங்கியுள்ளது.  #VaishnoDeviYatra #JKforestfire #yatraresumes
    ×